Home / இந்திய செய்திகள் / தீ விபத்தில் தாயும் குழந்தையும் பலி.

தீ விபத்தில் தாயும் குழந்தையும் பலி.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் எட்டு மாத குழந்தையும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று தமிழகம் – விழும்புரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவில் வசித்துவருபவர் சரணவன். இவர் மாற்றுத் திறனாளி பட்டதாரி. இவரது மனைவி கனகா. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை, 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை தனது 5 வயது மகளுடன் சரவணன் ஒரு அறையிலும் மற்றொரு அறையில் 8 மாத ஆண் குழந்தையுடன் கனகாவும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் கனகாவும், 8 மாத குழந்தையும் சிக்கிக் கொண்டனர். சரவணனும் செய்வதறியாது சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். கணவர் லேசான தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மனைவி மீது சந்தேகப்பட்டு தான் தீ வைத்ததாக சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

காயமடைந்த செய்தியாளரின் மனதை உருக்கும் வீடியோ!

சத்தீஸ்கரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் தீவிரவாத தாக்குதலை காயமடைந்ததையடுத்து தனது அம்மாவுக்கு உருக்கமான வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். சத்தீஸ்கரில் ...

%d bloggers like this: