வங்கக்கடலில் சென்னைக்கு அருகே உருவான தித்லி புயல் அதி தீவிரமாக உருவெடுத்தது. இருப்பினும் தமிழகம் தப்பியது. இந்நிலையில் ஆந்திரா-ஒடிசா இடையே கடலோர பகுதிகளை நோக்கி புயல் மேற்கொண்டதால் அம்மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை ஒடிசா ஆந்திரா இடையே அதிகாலை 5.30 மணி அளவில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்ததன் தாக்கம் காரணமாக ஒடிசா மாநிலத்தில் பலதத் மழை பெய்துவருகிறது. மரங்கள்முறிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் 3 லட்சம் பேர் வரையில் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.