Home / உலகச் செய்திகள் / திடீர் வெடி விபத்து: பாலஸ்தீன பிரதமர் பயணித்த வாகனத்தில்..

திடீர் வெடி விபத்து: பாலஸ்தீன பிரதமர் பயணித்த வாகனத்தில்..

பாலஸ்தீனத்தில் அந்நாட்டு பிரதமர் பயணம் செய்த வாகனத்தில் வெடி விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் ரமி ஹம்தல்லா பிரதமராக பதவி வகிக்கின்றார். அவர் நேற்று காசாவில் கழிவுப்பொருட்கள் ஆலை ஒன்றை தொடங்கிவைப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

அவர் காசா சாலையில் பயணம் செய்த போது குறிப்பிட்ட ஒரு இடத்தை ரமி ஹம்தல்லாவின் வாகனம் கடந்தபோது பலத்த வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் உடனடியாக வெளியாகின. அதில் பிரதமர் ரமி ஹம்தல்லா காயமின்றி உயிர் தப்பியது தெரிந்தது.

வெடிவிபத்தின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. பிரதமர் ரமி ஹம்தல்லா திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

About இனியவன்

x

Check Also

கூகுள் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள் நிறுவனத்தின் அணுகுமுறையை கண்டித்து உலகம் முழுவதுமுள்ள அந்நிறுவன பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் ...

%d bloggers like this: