Home / உள்நாட்டு செய்திகள் / திடீர் யாழ் விஜயம் : சம்பந்தன்

திடீர் யாழ் விஜயம் : சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் சிலையொன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாளகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை திறப்பு விழா நிகழ்வுகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்காக அன்றையதினம் யாழ் வருகின்ற இரா.சம்பந்தன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரின் சிலையைத் திறந்து வைக்கவுள்ளார்.

இதன்போது சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் நெல்லியடிக்கும் செல்லவுள்ளதாகவும் இதன் போது பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரியவருகின்றது.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: