Home / உள்நாட்டு செய்திகள் / திங்கட்கிழமை வரை காற்றுடன் கூடிய காலநிலை

திங்கட்கிழமை வரை காற்றுடன் கூடிய காலநிலை

நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் தற்பொழுது நிலவும் காற்றுடன் கூடிய காலநிலை எதில்வரும் திங்கட்கிழமை வரை நீடிக்கக் கூடும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

காற்றின் வேகம் திங்கட்கிழமைக்குப் பின்னர் படிப்படியாக குறைவடையும்.

 

காலியில் இருந்து கொழும்பு, புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்பிரசேத்தில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்துடன் வீசக்கூடும்.

 

இதன்போது இந்தப் பிரதேசத்தில கடல் கொந்தளிப்புடன் அல்லது கடும் கொந்தளிப்புடன் காணப்படும். ஏனைய கடற் பிரதேசத்தில் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தை கொண்டதாக அமைந்திருக்கும். இதன்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும். இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்!!

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ...

%d bloggers like this: