Home / உள்நாட்டு செய்திகள் / தவறான விவரங்களுடன் -வீதிப் பெயர்ப்பலகைகள்!

தவறான விவரங்களுடன் -வீதிப் பெயர்ப்பலகைகள்!

வவுனியாவில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டு வரும் வீதிப் பெயர்ப்பலகைகளில் சரியாக தகவல்கள் வழங்கப்படவில்லை இதனால் மக்களுக்கு குழப்பங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசங்களும் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

வவுனியா நகரங்களில் வீதி அதிகாரசபையினரால் வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளில் சில எழுத்துப்பிழைகள் காணப்பட்டடை சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் இன்று வரையில் அதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது வவுனியா நெளுக்குளம் பகுதியில் வீதியில் பொருத்தப்பட்டுள்ள பலகையில் வவுனியா நகர் 4.5 கிலோ மீற்றர் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டு காணப்படும் பெயர்ப்பலகையில் 5 கிலோ மீற்றர் என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தவறான தகவல்களுடன் பெயர்ப்பலகைகள் காணப்படுவது வாகன சாரதிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலை மீட்பு!!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலையை மீனவா்கள் மீட்டுள்ளனர். வட்டுவாகல் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கம்பி ...

%d bloggers like this: