Home / விளையாட்டுச் செய்திகள் / தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்-லசித் மலிங்கா RADIOTAMIZHA

தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார்-லசித் மலிங்கா RADIOTAMIZHA

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இலங்கை T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

வகுப்பு ஒன்றில் மாணவர்கள் சரி இல்லை என்றால் மாணவத்தலைவரை (Monitor) மாற்றி பிரயோசனம் இல்லை எனக் கூறிய லசித் மாலிங்க அவ்வாறு மாற்றம் வேண்டும் என்றால் மாணவத்தலைவர் மாற்றத்திற்கு தான் தயார் எனக் குறிப்பிட்டு ”நான் (அணித்தலைவர் பதவியினை) முடித்துக்கொள்ளத் தயார்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அணித்தலைவர் பதவியினை பொறுத்தவரை, எங்களிடம் அனுபவம் கொண்ட வீரர்கள் உள்ள போது நிலைமைகளை கையாள்வது, இலகுவான வேலையாக இருக்கும். இப்போது என்னிடம் அந்த வசதிகள் இல்லை. நான் 2014ஆம் ஆண்டில் (நான்) தலைவரான போது, என்னிடம் மஹேல, சங்கா, டில்ஷான், அஞ்செலோ (மெதிவ்ஸ்) எனப் போட்டியினை வெல்லக்கூடிய வீரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். இப்போது உள்ள வீரர்கள் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்.”

”முன்னர், சங்கா, மஹேல மற்றும் டில்ஷான் ஆகியோர் இருந்தனர். அவர்களுக்கு இன்னிங்ஸ் ஒன்றினை (எப்படி) உருவாக்குவது (என்பது) தெரியும். இப்போது உள்ள வீரர்கள் திறமையானவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அவர்களது துடுப்பாட்டப் பாணியினை வெளிப்படுத்த முயலும் போது பொறுமை அவசியம். ஆனால், (தற்போதைய இலங்கை T20 அணியில்) அது குறைவாக இருக்கின்றது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
.
மாலிங்க பதவி விலகும் சந்தர்பத்தில் தலைவராக டசுன் சானக நியமிக்கப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.“

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தோனியின் பெயர் இல்லாத பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல் RADIOTAMIZHA

இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் ...

%d bloggers like this: