Home / உள்நாட்டு செய்திகள் / தங்கள் மீது தாக்குதல் நடத்தியே தம்மைக் கைதுசெய்துள்ளதாகவும் இந்திய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவிப்பு

தங்கள் மீது தாக்குதல் நடத்தியே தம்மைக் கைதுசெய்துள்ளதாகவும் இந்திய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டு விசைப் படகுகளையும் ஒன்பது மீனவர்களையும் கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒப்படைத்துள்ளனர்.

இந்தியாவின் தமிழ்நாட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஐகதாப்பட்டனத்திலிருந்து கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மேற்படி இரு படகுககளையும் ஒன்பது பேரையுமே இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இலங்கையின் நெடுந்தீவுக் கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து காங்கேசன் துறை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நேற்றைய தினம் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியே தம்மைக் கைதுசெய்துள்ளதாகவும் கவலையுடன் கண்ணீர் மல்க அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

About அகமுகிலன்

x

Check Also

போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு (புதன்கிழமை) விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் நாகவிகாரையின் ...

%d bloggers like this: