Home / விளையாட்டுச் செய்திகள் / டோனியை மாற்றிய மகள்..

டோனியை மாற்றிய மகள்..

தந்தை என்ற அடிப்படையில் மகள் ஜிவா எனக்குள் மாற்றம் கொண்டுவந்துவிட்டார். ஏனெனில் பெண்குழந்தைகள் எப்பொழுதும் தந்தையிடம் சற்று அதிக பாசமாகத் தான் இருப்பர்.’ என டோனி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி 37 இரண்டு முறை (டுவென்டி-20 -2007 -50 ஓவர் 2011) உலகக் கோப்பையை வென்றவர். இரு ஆண்டுகள் தடைக்குப் பிறகு களமிறங்கிய ஜ.பி.எல் தொடரில் சென்னைக்கு சம்பியன் பட்டம் வென்றவர்.

தோனி கூறியது,

மூன்று ஆண்டுக்கு முன் எனது மகள் ஜிவா பிறந்த போது உலகக் கோப்பைத் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தேன். தொடர்ந்து பெரும்பாலான நேரங்கள் கிரிக்கெட் விளையாடினேன். ஜிவாவின் வருகை கிரிக்கெட் வீரராக எனக்கு ஏதும் மாற்றம் கொண்டுவந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.. மற்றப்படி சாதாரண மனிதனாக தந்தையாக எனக்குள் மாற்றம் ஏற்பட்டது உண்மைதான். ஏனெனில் பெண்குழந்தைகள் எப்பொழுதும் தந்தையிடம் சற்று அதிக பாசமாகத் தான் இருப்பர். சில நேரங்களில் தந்தை வந்தால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடிப்பது உண்டு.

ஜ.பி.எல் தொடர் நடந்த போது அனைத்து போட்டிகளுக்கும் ஜிவாவை அழைத்து சென்றேன். மகளுடன் நேரத்தை செலவிட்டதை எண்ணி மகிழ்கின்றேன். ஜிவாவை மைதானத்திற்கும் அழைத்து செல்ல வைத்த கோரிக்கை நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். இவ்வாறு தோனி கூறினார்.

About இனியவன்

x

Check Also

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி. தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு ...

%d bloggers like this: