Home / உள்நாட்டு செய்திகள் / ஜப்பான் சென்றடைந்தார் மைத்திரிபால சிறிசேன

ஜப்பான் சென்றடைந்தார் மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரச சுற்றுப்பயணமாக இன்று காலை ஜப்பான் சென்றடைந்தார்.

ஜனாதிபதி இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்து கொண்டு ஜப்பான் சென்றுள்ளார்.

டோக்கியோ நகரில் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பானின் விசேட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

இந்த சுற்றுப் பயணத்தின் போது ஜப்பானிய பேரரசரையும் மகா ராணியையும் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஜப்பானிய அரசின் உயர் கௌரவத்தை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ வரவேற்பு வைபவம் எதிர்வரும் புதன்கிழமை ஜப்பானிய பிரதமர் அலுவலத்தில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படும். விசேட வர்த்தக முதலீட்டு மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஜெய்க்கா நிறுவன தலைவர் ஜப்பானிய வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

About இனியவன்

x

Check Also

இலங்கையில் இன்று பாராளுமன்றத்தில் நடந்தது என்ன..?

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் ...

%d bloggers like this: