Home / விளையாட்டுச் செய்திகள் / செஸ் போல ‘செக்’ வைத்த சகால்

செஸ் போல ‘செக்’ வைத்த சகால்

சவுத்தாம்ப்டன்: ‘‘துவக்கத்தில் செஸ் விளையாடியது தான் பொறுமையாக செயல்படவும், சரியான முறையில் திட்டமிடவும் கைகொடுக்கிறது,’’ என இந்திய அணியின் சகால் தெரிவித்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சுழலில் அசத்திய இந்தியாவின் சகால், அறிமுக உலக கோப்பை போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு கைகொடுத்தார்.

இதுகுறித்து சகால் கூறியது:

கிரிக்கெட்டுக்கு வரும் முன் செஸ் விளையாடினேன். இது பொறுமையாக இருக்கவும், சரியான முறையில் திட்டமிடவும் எனக்கு கற்றுக் கொடுத்தது. ஏனெனில் செஸ் விளையாடும் போது அடுத்தடுத்த 15 நகர்த்தல்கள் குறித்து முன்னதாக யோசிக்க வேண்டும். இதுபோல, டுபிளசி போன்ற வீரர்களுக்கு எப்படி பவுலிங் செய்யலாம் என முன்னதாக திட்டமிட உதவும்.

எனது பந்துகளை டுபிளசி எதிர்கொண்ட விதத்தை பார்த்து, திட்டத்தை மாற்றி பந்து வீசினேன். அவரும் சரியாக கணிக்கவில்லை. கடைசியில் திட்டமிட்டபடி டுபிளசி சிக்கிக்கொண்டார். இது மகிழ்ச்சியாக இருந்தது.

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் ரோகித் சர்மா விளையாடிய விதம், அவரது உறுதியான மனநிலையை வெளிப்படுத்தியது. பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என உணர்த்தினார். ஏனெனில் துவக்கத்தில் பந்துவீச்சுக்கு கைகொடுக்க, பேட்டிங் கடினமாக இருந்தது.

இவ்வாறு சகால் கூறினார்.

About இனியவன்

x

Check Also

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை  அடிப்படையில்தான் விளையாட ...

%d bloggers like this: