Home / இந்திய செய்திகள் / சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கக் கட்டிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கக் கட்டிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கக் கட்டிகளை, 2 பெண் பயணிகளிடம் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹாங்காங்கில் இருந்து Cathay Pacific விமானம் மூலம் சென்னை வந்த கொரியப் பெண்கள் 2 பேர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கண்காணித்த வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள், இருவரையும் பிடித்து விசாரணை ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை பெண் அதிகாரிகள் சோதனை செய்த போது, ஸ்கர்ட் போன்ற உள்ளாடையில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 24 தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட 24 கிலோ தங்கத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் என மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்கத்தை கடத்தி வந்த கொரியாவைச் சேர்ந்த ஹேன்பியோல் ஜுங் ((Hanbyoul jung)) மற்றும் ஏன்யங் கிம் ((Eunyoung kim)) ஆகியோரைப் பிடித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

டிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் ...

%d bloggers like this: