Home / இந்திய செய்திகள் / சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை

லூபன் புயல் காரணமாக, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வரை தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சென்னை வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

வங்கக்கடலில் வியாழக்கிழமை உருவான டிட்லி அதிதீவிர புயல், வியாழக்கிழமை அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீ காகுளம் மாவட்டத்தில் பலசா என்னும் இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் படிப்படியாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள அதிதீவிர புயலான லூபன் தொடர்ந்து மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஏமன் மற்றும் தெற்கு ஓமன் கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதேவேளை டிட்லி புயல் காரணமாக வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று லூபன் புயல் காரணமாக மத்திய மேற்கு அரபிக்கடலில் ஆழமான பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை (அக்.14) மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

About இனியவன்

x

Check Also

பிரதமர் மோடியின் ட்வீட்.!

சமீபத்தில் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்ட மன்ற தேர்தலில் ...

%d bloggers like this: