Home / உள்நாட்டு செய்திகள் / சூரிய சக்தி மின்­க­லத்­தொ­குதி வவு­னி­யா­வில் திறப்பு!!

சூரிய சக்தி மின்­க­லத்­தொ­குதி வவு­னி­யா­வில் திறப்பு!!

வவு­னி­யா­வில் சூரிய சக்­தி­யில் இருந்து மின்­சா­ரத்­தினை பெறக்­கூ­டிய மின்கலத்­தொ­கு­திக் கட்­ட­மைப்பு மின்­சக்தி எரி­சக்தி அமைச்­சர் ரவி கருணாநாயக்­க­வி­னால் நேற்றைய தினம் திறந்­து­வைக்­கப்­பட்­டது.

வவு­னியா அட்­ட­மஸ்­கட பகு­தி­யில் தனி­யார் நிறு­வ­ன­மொன்­றி­னால் 380 மில்லி­யன் ரூபா பெறு­ம­தி­யில் அமைக்­கப்­பட்ட சூரிய சக்­தி­யில் இருந்து மின்சா­ரத்தை பெறும் கட்­ட­மைப்­புத் ­தொ­கு­தி­யா­னது நாளாந்­தம் 7 ஆயி­ரம் யூனிட் மின்­சா­ரத்­தினை உற்­பத்தி செய்து வழங்­கக்­கூ­டி­யது.

மின்­சா­ரத்­தினை குறைந்­த­ வி­லை­யில் பெற்­றுக்­கொள்­ளும் செயற்­பாட்­டில் சூரியசக்தியிலிருந்து  மின்­சா­ரத்­தினை பெறும் பொறி­மு­றை­கள் அர­சின் முனைப்­பு­டன் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலை­யில் வவு­னி­யா­வில் குறித்த இந்த கட்­ட­மைப்பு திறந்துவைக்­கப்­பட்­டது.

நிகழ்­வில் மின்­சக்தி எரி­சக்தி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க, வர்த்­தக கைத்தொ­ழில் மீளக்­கு­டி­யேற்ற அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீன், குறித்த நிறுவனத்தின் உயர் அதி­கா­ரி­கள், வவு­னியா நக­ர­சபை உறுப்­பி­னர் அப்­துல் பாரி, ரிசாட் பதி­யுர்­தீ­னின் பிரத்­தி­யே­கச் செய­லர் முத்து முக­மது உட்­பட பலரும் இந்த நிகழ்வில் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர்.

ஏற்­க­னவே இரண்டு சூரி­ய­சக்­தி­யில் மின் உற்­பத்தி செய்­யப்­ப­டும் கட்­ட­மைப்­புத் ­தொகு­தி­கள் இந்­த பகு­தி­யில் இயங்கி­ வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­வேளை அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க கிளி­நொச்­சிக்­கும் பய­ணம் மேற்கொண்­டி­ருந்­தார். கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கத்­தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்ட அவர், பூந­க­ரிப் பகு­தி­யில் காற்­றாலை அமைத்து அநேக பகு­தி­க­ளுக்கு மின்­சா­ரம் வழங்­கப்­ப­டும் என வாக்குறுதி வழங்­கி­னார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: