Home / உலகச் செய்திகள் / சுகாதார அமைச்சர் ஒலி இலுங்கா கைது!!

சுகாதார அமைச்சர் ஒலி இலுங்கா கைது!!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஒலி இலுங்கா (Oly Ilunga) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்ட அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் மாத்திரம் கொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்திற்குட்பட்டு 1000 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

நிதியுதவி காணப்பட்ட போதிலும் இபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காணப்பட்ட சிக்கல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், Oly Ilunga நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்த்து நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு முயல்வதாக கிடைத்த தகவலையடுத்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குற்றச்சாட்டுகளை Oly Ilunga மறுத்துள்ளார்.

Oly Ilunga கடந்த ஜூலை மாதம் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: