Home / உலகச் செய்திகள் / சிறப்பான சந்திப்பு – டிரம்ப்; கடந்த காலத்தை விட்டுவிட போகிறோம் – கிம்

சிறப்பான சந்திப்பு – டிரம்ப்; கடந்த காலத்தை விட்டுவிட போகிறோம் – கிம்

11.50: ஆட்சிகவிழ்ப்பு குறித்து அஞ்சினாரா கிம்?

கிம் ஜோங் – உன் தான் பதவி ஏற்றதிலிருந்து முதல் ஆறு ஆண்டுகளுக்கு வெளிநாடுகள் எதற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. தான் வட கொரியாவில் இல்லாவிட்டால் அங்கு ஆட்சி கவிழ்ப்பு நேரிடும் என்று அவர் அஞ்சினார் என்று கருதப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு, முதலாவதாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், பின் தென் கொரியாவிற்கும் அதன் பின் சிங்கப்பூருக்கும் அவர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கிம் ரஷ்யாவிற்கும் பயணம் மேற்கொள்ளலாம், என்கிறது பிபிசி மானிட்டரிங் பிரிவு

11.47: ‘இது கிம்முக்கு மிகப் பெரிய வெற்றி’

சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில் நடைபெற்ற உச்சிமாநாடு, கிம்முக்கு மிகப் பெரிய வெற்றியை தருவதாக அமைந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் ரூபர்ட் ஹேஸ் தெரிவித்தார்.

”அதே போல், டிரம்புக்கும் இது வெற்றி தரும் மாநாடுதான். கடந்த காலத்தில் இரு தலைவர்களுக்கும் இடையிலான உறவு நிலையில் இருந்து மாறுபட்ட நிலை தற்போதிய மாநாட்டில் காணப்பட்டது” என்று அவர் மேலும் கூறினார்.

11.45 சென்டோசாவில் செய்தியாளர்களை சந்திக்கிறார் டிரம்ப்

அதிபர் டிரம்ப் இன்னும் சென்டோசா தீவில் இருப்பது போல தெரிகிறது. கேப்பெல்லா ஹோட்டலில் கையெழுத்திடப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11.32: சென்டோசா தீவிலிருந்து புறப்பட்டனர்

டிரம்பின் வாகன தொடரணி சென்டோசா தீவிலிருந்து புறப்பட்டது, பத்திரிகையாளர்களுடன் பின்னர் பேசுவதாக கிம் கூறினார். அதுபோல, கிம்மும் இன்னும் சில மணிநேரங்களில் சிங்கப்பூரிலிருந்து புறப்படுவார் என தெரிகிறது.

11.29: ‘கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன்’

வெள்ளை மாளிகைக்கு கிம்மை அழைப்பீர்களா என்று அதிபர் டிரம்பிடம் கேட்டதற்கு, ‘நிச்சயமாக அழைப்பேன்’ என்று அவர் கூறினார்.

'கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைப்பேன்'

11.27: மனித உரிமை மீறல் குறித்து பேசப்பட்டதா?

இல்லை என்றே தெரிகிறது; 2016ஆம் ஆண்டு அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியர் வட கொரியாவில் கைது செய்யப்பட்டார். அங்கு சிறைபிடிக்கப்பட்ட வார்ம்பியர், 2017ஆம் ஆண்டு கோமா நிலையில் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, டிரம்போ, கிம்மோ ஏதும் பேசவில்லை.

11.22 ‘தனது நாட்டின் மீது கிம் அதிக அன்பு வைத்துள்ளார்’ – டிரம்ப்

“நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நிறைய தெரிந்து கொண்டோம்” என்று குறிப்பிட்ட டிரம்ப், கிம் ஜாங்-உன் புத்திசாலியானவர் என்று,ம் அவர் நாட்டின் மீது அதிக அன்பு வைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

11.20 “சிறப்பு உறவு”

கிம் ஜாங்-உன்னுடன் சிறப்பான உறவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்று வரை உலகில் மிகவும் தனிமைபடுத்தப்பட்டு வந்த தலைவர் கிம் ஜாங்-உன் என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

11.16: முடிந்தது உச்சி மாநாடு

ஆவணங்களில் கையெழுத்திட்டபின், புன்னகைத்து, கைக்குலுக்கி டிரம்பும் கிம்மும் பிரிந்து  சென்றனர்

கையெழுத்திடப்பட்ட ஆவணங்களின் நகல்கள் சிறிது நேரத்தில் செய்தியாளர்களிடம் தரப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

11.14: நாங்கள் கணித்ததைவிட, சிறப்பான சந்திப்பாக அமைந்தது: டிரம்ப்

“தற்போது ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் பெருமிதம் அடைகிறோம்

இதற்கு முன்பு இருந்த நிலையைவிட மாறுபட்டதாக இருக்கும்.

நாங்கள் விசேட உறவை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

நாங்கள் கணித்ததைவிட, சிறப்பான சந்திப்பாக அமைந்தது.

நான் சேர்மன் கிம் அவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன்.

இன்று நடந்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது என்று கூறிய டிரம்ப், கடந்த காலத்தைவிட இனி வரவிருக்கும் வட கொரியாவுடனான உறவு மிகவும் வேறு மாதிரி இருக்கும் ” என்றார் டிரம்ப்

Presentational grey line

11.13: பெரிய மாற்றத்தை பார்க்க போகும் உலகம்

“கடந்த காலத்தை விட்டுவிட போகிறோம்” என்று வட கொரிய தலைவர் கிம் கூறியுள்ளார்.

“பெரிய மாற்றத்தை இந்த உலகம் பார்க்கப் போகிறது” என்றார் அவர்.

Presentational grey line

11.12: கையெழுத்திடுகிறார்கள்

ஆவணங்களில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் வரலாற்று சிறப்புமிக்க, விரிவான ஆவணங்கள் என்று கூறப்படுகிறது.

Presentational grey line

11.10: விரிவான ஆவணங்கள்

புகைப்பட கலைஞர்கள் சூழ, கையெழுத்திடவிருக்கும் அறையில் டிரம்பும் கிம்மும் நுழைந்தனர்

“விரிவான ஆவணங்களில்” கையெழுத்திட இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

Presentational grey line

11.05: மேஜைக்கு கொண்டுவரப்பட்ட கோப்புகள்

டிரம்ப் – கிம் கையெழுத்திடவிருக்கும் மேஜையில் இரண்டு கோப்புகள் வைக்கப்பட்டுள்ளன. தலைவர்களுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

10.52: கையெழுத்திடப் போகும் மேஜை

டிரம்ப்-கிம் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறார்கள் என்று தெரியவில்லை.

Presentational grey line

10.49: பேனாவில் டிரம்பின் கையெழுத்து?

ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப்-கிம் வரவிருக்கும் மேஜையில், டிரம்ப் கையெழுத்திட போகும் பேனா வைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.

 

About இனியவன்

x

Check Also

ஆஃபிரிக்காவின் இளம் கோடீஸ்வரர் கடத்தல்

ஆஃபிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் டான்சானியாவின் முக்கிய நகரமான டர் ...

%d bloggers like this: