Home / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன்.. சம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி?

சற்றுமுன்.. சம்மந்தனின் பதவி காப்பாற்றப்பட்டது எப்படி?

ஸ்ரீ லங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்மந்தன் இருப்பதை மாற்றியமைக்க முடியாதென சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை சபையின் நாயகர் கரு ஜயசூரிய விடுத்தார்.

அரசியல் அமைப்பு அல்லது பாரம்பரிய நடைமுறைக்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் என்ற ரீதியில் வேறொரு நபரை நியமிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், பிரித்தானிய பாரம்பரியம் அல்லது உலகில் ஏனைய சம்பிரதாயத்திற்கமைவாக இதனை செய்யமுடியாதென்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

பாராளுமன்ற விவாதத்திற்கு நேர ஒதுக்கீடு செய்யும் பொழுதும் நாடாளுமன்ற தெரிவிக்குழு சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்கட்சிக்கு தற்பொழுது வழங்கப்படும் நேர ஒதுக்கீடு மற்றும் அதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி சமீபத்தில் சபாநாயகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் ஈடுபடுத்துமாறு தெரிவித்திருந்தது.

இதனால் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவராகவுள்ள இரா.சம்மந்தனின் பதவி பறிபோகும் அபாய நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

About இனியவன்

x

Check Also

மஹிந்த மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென விரும்புகின்றனர்

மகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் கNநை;திரமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புகின்றனர். அதற்காகவே இன்றையஅரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநடுநிலைவகிக்கவேண்டுமென்றும் ...

%d bloggers like this: