Home / உள்நாட்டு செய்திகள் / சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தல்-ஒருவர் கைது!!

சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தல்-ஒருவர் கைது!!

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள ஒருவரை சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயன்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

நோர்வேயில் வசிக்கும் இலங்கையரான சேதுரூபன் என்பவரே நேற்று (02) யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினை ஔிப்பதிவு செய்த ஊடகவியலாளரின் கெமராவிற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பரராஜசேகரம் சுஜீபன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: