Home / உள்நாட்டு செய்திகள் / சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று (6ஆம் திகதி) ஆஜராகுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உரைகள் மற்றும் காணொளிகளை பதிவேற்றி இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் பிரசாரங்களை மேற்கொண்டமையால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பல தடவைகளில் நிபுணர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, மதரசாக்கள் தொடர்பான நிபந்தனைகளை விதிப்பது குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகளையும் இன்று ஆஜராகுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: