Home / உலகச் செய்திகள் / சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் மனிதனின் வாய் போன்ற-மணிபர்ஸ்

மனித வாய் போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள, மணிபர்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜப்பானை சேர்ந்த டிஜே ஒருவர் 2 மாத உழைப்பிற்கு பின்னர் உருவாக்கிய இந்த பர்சை, வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டான நிலையில், அதனை இதுவரை 1 கோடியே 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

நிஜமான மனித வாய் போலவே தோற்றமளிக்கும் இந்த பர்சை, தத்ரூபமாக காட்சியளிக்கச் செய்வதற்காக, நிஜ பற்கள், ஈறுகள் போன்ற உருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பர்ஸ் விற்பனைக்கு அல்ல என்று தெரிவித்துள்ள அதன் வடிவமைப்பாளர், எவ்வகை பொருளினால் உருவாக்கப்பட்டது என்பது குறித்தும் தெரிவிக்க மறுத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: