Home / உலகச் செய்திகள் / சமூகவலைதள மோகம் விபரீதம் ஆனது

சமூகவலைதள மோகம் விபரீதம் ஆனது

அமெரிக்காவில் (BIRD BOX BLINDFOLD) என்ற விபரீதமான சேலஞ்சு போட்டியால் கண்களை கட்டி கொண்டு சாலையில் காரை ஓட்டி சிறுவர்கள் இருவர் விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

விளையாட்டு விபரீதம் ஆகும் என்பது போய் சமூகவலைதள மோகம் விபரீதம் ஆகிக் கொண்டே போகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் முக்கிய வீதி ஒன்றில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த காரை கண்களை கட்டிகொண்டு ஓட்டி வந்துள்ளனர். முக்கிய பகுதியில் நிலை தெரியாமல் மோதியதில் அந்த பகுதியில் உள்ள பல கார்கள் சேதமாகியது. மேலும் அங்கிருந்தவர்கள் பலர் பயந்து அலறி அடித்து ஓடித்தப்பினர். இதில் சிலருக்கு மட்டும் சாதுவான காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அந்த சிறுவர்களிடம் விசாரித்ததில் (BIRD BOX BLINDFOLD) என்ற சேலஞ்சை ஏற்று சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட இதுபோன்று செய்ததாகவும். இந்த முறையை சாண்ட்ரா புல்லக் நடித்த நெட்ஃபிக்ஸ் என்ற படம் பார்த்து செய்ய ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பொலிசார் அவர்களின் பெற்றோரிடம் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் பார்த்துகொள்ளும் படி கூறி அவர்களை அனுப்பியுள்ளனர்.

 

 

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: