Home / உள்நாட்டு செய்திகள் / சண்டிலிப்பாயில் மலசல கூடத்துக்குள் கசிப்பு வடித்து வந்த கில்லாடி

சண்டிலிப்பாயில் மலசல கூடத்துக்குள் கசிப்பு வடித்து வந்த கில்லாடி

சண்டிலிப்பாயில் வாடகைக்கு எடுத்த வீட்டில் மலசல கூடத்துக்குள் கசிப்பு வடித்து வந்த நபர் கசிப்பு மற்றும் கோடாவுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த 42 வயதுடைய இளவாலையைச் சேர்ந்த நபரே  இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும் இவர் வீட்டு மலசலகூடத்தில் கசிப்புக் காய்ச்சியுள்ளார். இவரிடம் இருந்து 750 மில்லி லீற்றர் கசிப்பு, 25 லீற்றர் கோடா, கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டன.

 

About அகமுகிலன்

x

Check Also

போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு (புதன்கிழமை) விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் நாகவிகாரையின் ...

%d bloggers like this: