Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது!!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரால் கைது!!

ஜூலை 28 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது துறைமுக வளாகத்தில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த 05 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் 01 டயர் குழாய் மற்றும் 01 நைலோன் வலையும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் 18 முதல் 31 வயது வரையிலான ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஜனாதிபதி ஆணைக்குழு மீது முழுமையான நம்பிக்கை உண்டு – பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை சாட்சியமளித்துள்ளார். ...

%d bloggers like this: