Home / உள்நாட்டு செய்திகள் / சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேர் கைது!!

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேர் கைது!!

மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 4 பேர் கடற்படையால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்வதுக்காக கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை மன்னார், பல்லெமுனே கடற்கரை பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான படகொண்று பரிசோதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதுடன் 409 கடல் அட்டைகள் அதன் போது கண்டுபிடிக்கப்பட்டன.

மேலதிக விசாரணையில் மீனவர்கள் அனுமதி இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் 34, 36, 42 மற்றும் 45 வயதான மன்னார் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி படகுகள், 2 வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் 409 கடல் அட்டைகள் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள், டிங்கி படகுகள், வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் கடல் அட்டைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இலங்கையில் வாகன பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து..?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ...