Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் இருவர் தமிழர்கள்

கொழும்பு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் இருவர் தமிழர்கள்

கொழும்பு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் இருவர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இருவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பாக காரொன்றில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களுள் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், மற்றைய நபர் மதி என்ற பெயரால் அழைக்கபடுபவரென்றும் குறித்த இருவருடனும் பயணித்த ஸ்டீவன் ராஜேந்திரனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேலும் கொட்டாஞ்சேனை- செல்லையா தோட்டத்தில் இடம்பெற்று வரும் ஹெரோய்ன் போதை வர்த்தகம் தொடர்பில் இரு குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About அகமுகிலன்

x

Check Also

அடுத்த வாரம் கம்போடியாவுக்குப் பயணிக்கவுள்ள-ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் கம்போடியாவுக்குப் பயணிக்கவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி கம்போடியாவுக்குச் செல்லும் அவர் 27ஆம் திகதி ...

%d bloggers like this: