மதவாச்சி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் வஹாமலுகொல்லேவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்றும், தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் 2 இரண்டு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த மூவரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லொரியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE