Home / உள்நாட்டு செய்திகள் / கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில், மாலை 4 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, வௌ்ளவத்தை, தெஹிவளை- கல்கிஸ்ஸ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, சொய்சாபுர, முல்லேரியா, பெலவத்த ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு – 4 மற்றும் கொழும்பு – 5 ஆகிய பகுதிகளுக்குக் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாக
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் தெஹிவளை வரையான நீர்விநியோகக் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

About இனியவன்

x

Check Also

வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை; என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா பாரதிபுரத்தில் வீட்டுத்திட்டத்திற்கான நிதி வழங்கப்படவில்லை என கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா பாரதிபுரத்தில் 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ...

%d bloggers like this: