Home / சினிமா செய்திகள் / “காலா” திரைப்படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட முடியாது- கர்நாடக உயர்நீதிமன்றம்!

“காலா” திரைப்படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட முடியாது- கர்நாடக உயர்நீதிமன்றம்!

காலா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட ஆலைக்கெதிரான போராட்டத்தின் போது தூத்துக்குடியை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களை மருத்துவமனையில் சந்தித்த நடிகர் ரஜினி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள் என கூறியதால் உலகின் பல பகுதிகளிலும், ரஜினி நடித்துள்ள காலா படத்திற்கு எதிர்ப்பது கிளம்பியுள்ளது. அதேசமயம் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு எதிராக ரஜினி கருத்து தெரிவித்திருந்ததால், அங்கு படத்தை திரையிட விட மாட்டோம் என கர்நாடகவை சேர்ந்த சில அமைப்பினர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், காலா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட முடியாது என கூறியதோடு, காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டது.

About இனியவன்

x

Check Also

பிரபல காமெடி நடிகர் திடீர் திருமணம்?

பிரபல காமெடி நடிகர் சதீஷ் திடீர் திருமணம் செய்திருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. பல ...

%d bloggers like this: