Home / உள்நாட்டு செய்திகள் / கார்பன் பரிசோதனை ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும்!

கார்பன் பரிசோதனை ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும்!

கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இன்று அனுப்பி வைக்கப்பட இருப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ   தெரிவித்துள்ளார்.

அத்தோடு அந்த அறிக்கை, 10 வருட காலத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மன்னார் மனித புதைக் குழியின் அகழ்வுப் பணி கள் 144ஆவது நாளாக நேற்றுப் புதன்கிழமை அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 316 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 307 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 26 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையவை” என்றார்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலை மீட்பு!!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலையை மீனவா்கள் மீட்டுள்ளனர். வட்டுவாகல் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கம்பி ...

%d bloggers like this: