Home / இந்திய செய்திகள் / காதலன் உட்பட 9 பேரால் சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி!!

காதலன் உட்பட 9 பேரால் சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி!!

பொள்ளாச்சியில் காதலனலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி, அடுத்தடுத்து தனது நண்பர்கள் 8 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் 16 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என அவரது பெற்றோர் கடந்த 5ஆம் தேதி புகார் அளித்தனர்.

விசாரணையில் இறங்கிய போலீசார், சிறுமியோடு நெருங்கிப் பழகியதாகக் கூறப்படும் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த அமானுல்லா என்ற இளைஞனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியை காதலிப்பதாகக் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த அமானுல்லா, கடந்த 4ஆம் தேதி அவரை காரில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளான்.

பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வர பயந்துகொண்டு வால்பாறை சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளான். இதனையடுத்து நண்பன் ஒருவனை செல்போனில் அழைத்த சிறுமி, தன்னை அழைத்துச் சென்று வீட்டில் விடுமாறு உதவி கேட்டுள்ளார்.

சிறுமியின் நிலையை போனிலேயே தெரிந்துகொண்ட அவரது நண்பன், மேலும் ஒரு நண்பனுடன் காரில் வந்துள்ளான். பின்னர் சிறுமியை அவர்கள் ஆழியாறு பகுதிக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளனர். அத்தோடு நில்லாமல் அவர்கள் மேலும் சில நண்பர்களை போனில் அழைக்கவே, அவர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஒருவழியாக அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி உறவினர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு அமானுல்லா உட்பட 9 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

 

About இனியவன்

x

Check Also

பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்த பாடகி!!

குஜராத் நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்தார். இதனையடுத்து அவரை ...

%d bloggers like this: