Home / உள்நாட்டு செய்திகள் / காணிகளை விரைவாக பதிவு செய்யும் ”ஒரு நாள் சேவை” வவுனியாவில் ஆரம்பம்!

காணிகளை விரைவாக பதிவு செய்யும் ”ஒரு நாள் சேவை” வவுனியாவில் ஆரம்பம்!

காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒரு நாள் சேவை வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்டச் செயலர் எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காணிக்குரிய ஆவணங்கள் ஒரே நாளில் பதிவு செய்யபட்டு உரிமையாளருக்கு வழங்கி வைக்கபட்டது.

குறித்த இந்த சேவை ஆரம்பிக்கபட்டதன் நினைவாக மாவட்டச் செயலக வளாகத்தில் மரம் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதின், பிரதேச செயலர்கள்,வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், ,பிரதேச சபைத் தலைவர்கள், சட்டத்தரணிகள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

சூரியசக்தி மறுமலர்ச்சி வேலைத்திட்டம்!!

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் ...

%d bloggers like this: