Home / உள்நாட்டு செய்திகள் / கல்வி பயிலும் மாணவர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவு!!

கல்வி பயிலும் மாணவர்களுக்கு நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவு!!

கல்வி கட்டமைப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட கட்டாய கல்வி வேலைத்திட்டத்தின் கீழ், உயர் தரத்தில் தொழில் பாடத்துறை தேர்ந்தெடுத்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்தும் முகமாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் இந்த வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

க.பொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறாக இருப்பினும் தொழில் பாடத்துறையின் கீழ் உயர்தரம் வரை செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பொருட்படுத்தாமல் நாளை உலகுக்கு ஏற்ற தொழில் துறைக்கான 26 பாடநெறிகளில் விரும்பிய 3 பாடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சிறுவர் உளவியல், உடற்கல்வி மற்றும் விளையாட்டு,கால்நடை உற்பத்தி தொழில்நுட்பம், உணவு உற்பத்தி திட்டமிடல் தொழில்நுட்பம், நிர்மாணத்துறை தொழில்நுட்ப கல்வி, மின் மற்றும் மின்னனு தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தினர் உபசரிப்பு, அழகு கலை உட்பட 26 பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | “எனது மரணத்துக்கு என் தந்தையே காரனம்” தற்கொலை செய்த மகள்!

நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவு, மேபில்ட் சாமஸ்பிரிவில் நேற்று (23) யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை ...

%d bloggers like this: