Home / இந்திய செய்திகள் / கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை!!

கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை!!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த 18 தமிழக மீனவர்களையும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடற்படையினர் கைதுசெய்து தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

இந் நிலையில் இவர்கள் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றுக்கு வந்தபோது நீதிவான் அவர்களை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 18 பேரையும் இந்திய குடியுரிமை அதிகாரிகளிடம் இலங்கை அதிகாரிகள் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் ...

%d bloggers like this: