Home / இந்திய செய்திகள் / கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 20 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்பிடிக்கச் சென்றன. அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஏராளமான மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இலங்கை படையினர் ரோந்து படகை கொண்டு மோதியதில், ஜெகன் என்பவரது படகு சேதமானதோடு, அதில் இருந்த மீனவர்களும் காயமடைந்துள்ளனர்.

மீனவர்களை எச்சரித்த இலங்கை கடற்படையினர், நடுக்கடலில் பழுதாகி நின்ற மற்றொரு படகில் இருந்த ரைமன் ஜூலியன், அமல் சந்தியா, ரிச்சர்ட் டேனியல் உள்ளிட்ட மீனவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் அதே பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர்  அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்தோடு புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்தவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மொத்தம் 20 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் அவர்களது 4 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை கிளிநொச்சி கடற்படை முகாமுக்கும், புதுக்கோட்டை மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கும் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்கள் கைது குறித்த தகவல் அறிந்த உறவினர்கள், அனைவரையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

டிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் ...

%d bloggers like this: