Home / விளையாட்டுச் செய்திகள் / ஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா

ஓய்வை உதறி உலகக்கோப்பையில் ஆடுகிறேன் என்றார் டிவில்லியர்ஸ்: தயவு தாட்சண்யமின்றி நிராகரித்த தென் ஆப்பிரிக்கா

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த 360 டிகிரி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் நடப்பு உலகக்கோப்பைக்காக ஓய்விலிருந்து விலகி தென் ஆப்பிரிக்க அணிக்காக ஆடுகிறேன் என்றார், ஆனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் அவர் வேண்டுகோளை நிராகரித்தது.

உலகக்கோப்பை ஆடப்போகிறோம் என்று அணி வீரர்களில் ஒரு சிலர் ஓராண்டாக அணியுடன் சேர்ந்து ஒரு பிணைப்பு ஏற்பட்ட நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் வருகை அணிக்கு நியாயம் செய்யாது என்று கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் கூறுகிறது.

இது குறித்து ஈஎஸ்பின் கிரிக் இன்போ செய்தியில் டிவில்லியர்ஸ் ஏப்ரல் மாதம் தென் ஆப்பிரிக்கா முதற்கட்ட 15 வீரர்கள் அணியை அறிவிக்க இருப்பதற்கு முன் டிவில்லியர்ஸ் தன் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.  ஆனால் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் டிவில்லியர்ஸ் கோரிக்கையை நிராகரித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ், தலைமைப் பயிற்சியாளர் ஒட்டைஸ் கிப்சன், லிண்டா ஸாண்டி ஆகியோரை சந்தித்து தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இது சாத்தியமல்ல என்று டிவில்லியர்ஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிவில்லியர்ஸ் கோரிக்கை பரிசீலிக்கப்படாமலே நிராகரிக்கப்பட்டதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்தியில் தனிப்பட்ட ஆதாரங்களை மேற்கோள்காட்டி கூறிஉள்ளது.

ஆனால் 2 காரணங்கள் உள்ளன, ஏ.பி.டிவில்லியர்ஸ் மே 2018-ல் ஓய்வு அறிவித்தார், உலகக்கோப்பைக்கு ஏறக்குறைய ஓராண்டு இருந்தது. ஆகவே அணித்தேர்வு அளவுகோலில் இது அடங்காது.  அதாவது தென் ஆப்பிரிக்கா உள்நாட்டு கிரிக்கெட், தென் ஆப்பிரிக்க அணிக்கு சில போட்டிகளை உலகக்கோப்பைக்கு முன் ஆடுவது போன்ற தேர்வுக்கொள்கை அளவுகோல் டிவில்லியர்சுக்கு பொருந்தவில்லை. மேலும் அவர் இல்லை என்று தேர்வு செய்யப்பட்ட வான் டெர் டூசன் நன்றாக ஆடும்போது டிவில்லியர்ஸை ரீகால் செய்தால் இவருக்கு அநீதி இழைப்பதாகும் என்று டிவில்லியர்ஸ் கோரிக்கையை அணி நிர்வாகம் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவு யாருக்கு நிஜமாகும்?

இம்முறை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி  இன்று(14) நடைபெறவுள்ளது. முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளன. ...

%d bloggers like this: