Home / உள்நாட்டு செய்திகள் / ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்ள எதிர்ப்பு!

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்ள எதிர்ப்பு!

பின்தங்கிய பாடசாலைகளுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அண்மையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்புக்கள் குவிந்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இந்த அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கான அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஊடக சந்திப்பொன்றில் வைத்து, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர், தமது சங்கம் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் ஆசிரியர்களுக்காக பரீட்சை எழுதி சித்தி பெற்ற 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது வேலையற்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பது சிறந்தது அல்லவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: