Home / உலகச் செய்திகள் / ஒரே நாளில் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவி சீனா சாதனை

ஒரே நாளில் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவி சீனா சாதனை

ஒரே நாளில் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவி சீனா சாதனை படைத்துள்ளது. சான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து கியூசௌ ராக்கெட் உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

Image result for Avi China records two rockets in a single day"

இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஜிலின்-1 காவோபென் 02பி (Jilin-1 Gaofen 02B) என்ற தொலை உணர்வு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. இந்த செயற்கைக்கோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தரவு மற்றும் சேவைகளை வழங்கும்.

இதனைத் தொடர்ந்து, அதே ஏவுதளத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு 6 சிறிய செயற்கைக்கோள்களுடன் மற்றொரு கியூசவ் 1ஏ (Kuaizhou 1A) ராக்கெட் ஏவப்பட்டது.

இரண்டு ராக்கெட்டுகளிலும் செலுத்தப்பட்ட 7 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்:60 இராணுவ வீரர்கள் பலி!!

யேமனில் இராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 60 இராணுவ வீரர்கள் பலியாகினர். யேமனில் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் ...

%d bloggers like this: