Home / உள்நாட்டு செய்திகள் / ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் ஆா்ப்பாட்டம்!!

ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் ஆா்ப்பாட்டம்!!

ஏ-9 வீதியில் கெக்கிராவை – கொரப்பகல்லை – திப்பட்டுவெ வ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் பலியாகினர்.

எஹலியகொடையிலிருந்து அநுராதபுரம் நோக்கி மரக் குற்றிகளை ஏற்றியவாறு பயணித்த கெப் ரக வாகனம், மேலதிக வகுப்புக்காக செல்ல வீதி ஓரத்தில் காத்திருந்த சிறுவர்கள் மீது மோதிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்தில் இரண்டு பேர் பலியானதுடன், மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் 14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுவர்களே பலியாகியுள்ளனர்.

சம்பத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 18 வயதுடைய இளைஞன் ஒருவர், தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து தப்பிச் சென்ற குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி, சம்பவ இடத்திலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் வைத்து, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த கெப் ரக வாகனத்தில் இருந்த மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி 54 வயதுடையவர் என்றும், அவருக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேநேரம், குறித்த விபத்து ஏற்பட்டதையடுத்து, பிரதேசவாசிகள் வீதியை வழிமறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால், அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப் பொருளை விழுங்கிய நபர் உயிரிழப்பு!!

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். 38 வயதான குறித்த நபர் வெல்லம்பிட்டி ...

%d bloggers like this: