Home / உலகச் செய்திகள் / உலக பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்-பில்கேட்ஸ்

உலக பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்-பில்கேட்ஸ்

நியூயார்க்: உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்நிலையில் பிரான்சின் எல்.வி.எம்.எச்., நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பெர்க் கூறியுள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தற்போதும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர். பில்கேட்ஸ் தனது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பெர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: