Home / உலகச் செய்திகள் / உலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்!!

உலகம் முழுவதும் புவி வெப்பமாவதைத் தடுக்கக் கோரி மாணவர் போராட்டம்!!

இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்றைய தினம் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும், இளைய தலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி, தங்கள் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிக் குழந்தைகள் சுட்டிக்காட்டினர்.

இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெள்ளியன்று ஏராளமான மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராடினர்.

அமெரிக்க நகரங்களில் நடந்த போராட்டத்தின் போது பாரிஸ் பருவநிலைமாற்ற ஒப்பந்தத்தைப் புறக்கணிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

நெதர்லாந்தில் பயணிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் -மூவர் பலி! 9 பேர் காயம்!

நெதர்லாந்து உட்ரெச்ட் (Utrecht) நகரில் டிராமில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் மீது இனந்தொியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ...

%d bloggers like this: