Home / விளையாட்டுச் செய்திகள் / உலகக்கோப்பை தொடரில் ஜாம்பவான்களுடன் களமிறங்கும் சங்ககாரா! ஐசிசி வெளியிட்ட வர்ணனையாளர்கள் பட்டியல்

உலகக்கோப்பை தொடரில் ஜாம்பவான்களுடன் களமிறங்கும் சங்ககாரா! ஐசிசி வெளியிட்ட வர்ணனையாளர்கள் பட்டியல்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐ.சி.சி வெளியிட்டுள்ள 24 பிரபல வர்ணனையாளர்கள் பட்டியலில், இலங்கையின் முன்னாள் பிரபல வீரர் குமார் சங்ககாராவும் இணைந்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் 30ஆம் திகதி தொடங்கும் உலகக்கோப்பை ஒருநாள் தொடரில், 10 அணிகள் களமிறங்கி பலப்பரீட்சை நடத்த உள்ளன. இங்கிலாந்து மைதானங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருப்பதால், துடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் வர்ணனை செய்யும் முன்னாள் வீரர்கள் பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது. சர்ச்சையாக பேசுபவர்கள், நகைச்சுவையாக பேசுபவர்கள் என பார்த்து பார்த்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்கள் இதில் இடம்பிடித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் புதிதாக இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லமும் இம்முறை வர்ணனையாளராக சேர்க்கப்பட்டுள்ளார். மொத்தம் 24 வர்ணனையாளர்களுடன் இப்பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

வர்ணனையாளர்கள் பட்டியல்
  • குமார் சங்ககாரா
  • மைக்கேல் கிளார்க்
  • இயான் பிஷப்
  • சவுரவ் கங்குலி
  • நாசர் ஹுசைன்
  • மிலானே ஜோன்ஸ்
  • மைக்கேல் ஆர்தர்டன்
  • வாசிம் அக்ரம்
  • ஷான் பொல்லாக்
  • பிரண்டன் மெக்கல்லம்
  • அலிசன் மிட்ஷெல்
  • கிரேம் ஸ்மித்
  • மைக்கேல் ஸ்லாட்டர்
  • மார்க் நிகோலஸ்
  • மைக்கேல் ஹோல்டிங்
  • இஷா குஹா
  • போமி பாங்வா
  • சஞ்சய் மஞ்ரேக்கர்
  • ஹர்ஷா போக்ளே
  • சைமன் டொல்
  • இயான் ஸ்மித்
  • ரமீஸ் ராஜா
  • ஹைதர் அலிகான்
  • இயான் வாட்

About இனியவன்

x

Check Also

பயிற்சிக்கு தாமதமாக வந்தால் 10 ஆயிரம் அபராதம் – தோனி கட்டளை

பயிற்சிக்கு வீரர்கள் தாமதமாக வந்தால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தோனி கேப்டனாக இருந்த போது தெரிவித்ததாக ...

%d bloggers like this: