Home / உள்நாட்டு செய்திகள் / உயர் நீதிமன்ற நீதியரசர் பிரதம நீதியரசராக நியமனம்…

உயர் நீதிமன்ற நீதியரசர் பிரதம நீதியரசராக நியமனம்…

புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் பிரசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதியாக நீதித்துறையில் இணைந்துகொண்டு படிப்படியாக பதவி உயர்வினை பெற்ற நளின் பெரேரா, பிரதம நீதியரசராக நியமிக்கப்படுகின்றபோது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வந்தார்.

 

About இனியவன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: