Home / உள்நாட்டு செய்திகள் / உயர் தர மாணவர்களுக்கு ரப் கணிணி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

உயர் தர மாணவர்களுக்கு ரப் கணிணி வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் உயர் தர மாணவர்களுக்கு ரப் கணிணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து 1AB பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் டெப் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நவீன கல்வியில் உலகளாவிய தேவைகளுக்கு ஏற்ப பாடசாலை கல்வியை உருவாக்கும் அரச வேலைத்திட்டத்தின் கீழ், ரப் கணிணி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் தெரிவித்துள்ளார்.

1 AB பாடசாலைகளில் உள்ள உயர்தர மாணவர்களை இலக்கு வைத்து கண்காணிப்புச் செயற்திட்டம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும். அதன் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு மூன்று மாதங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் ரப் கணிணி வழங்கல் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

அத்தோடு ரப் கணிணி வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்த போகும் முறைமையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்வைக்கவுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: