Home / உள்நாட்டு செய்திகள் / உணவு திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் பலி!!

உணவு திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் பலி!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உணவு திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கில்ராய் நகரில் 1979ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பூண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவான இதில் சமையல் போட்டிகள் உட்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்தாண்டு நடைபெற்ற இந்த திருவிழாவில் பலர் தங்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த திருவிழாவின் கடைசி நாளின் போது, மர்ம நபர்கள் கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 4 பேர் பலியான நிலையில், பலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயது மதிக்கத்தக்க நபர் துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் கூறியுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கில்ராய் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த திருவிழாவில் எந்த விதமான ஆயுதங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும்  நிலையில் பாதுகாப்புகளையும் மீறி நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது திருவிழாவில் கூடியிருந்தவர்கள் சிதறி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: