Home / உள்நாட்டு செய்திகள் / ஈழத்தின் நாட்டுக்கூத்து கலைஞர் கணேசலிங்கம் மாரடைப்பால் உயிரிழந்தார்

ஈழத்தின் நாட்டுக்கூத்து கலைஞர் கணேசலிங்கம் மாரடைப்பால் உயிரிழந்தார்

முல்லைத்தீவு நாட்டுக்கூத்து கலைஞர் கணேஸ் என்ற கணேசலிங்கம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

ஈழத்தின் நாட்டுக்கூத்து வரலாற்றில் முல்லைமோடி நாட்டுக்கூத்துக்கு தனி வரலாறும் வாசமும் உண்டு அத்தகைய ஈழக்கூத்து வடிவத்தில் தன் ஆற்றலை கொடுத்தவர்.

மேற்கத்தைய கலை வடிவங்களில் பாரம்பரிய கலைவடிங்களை கொண்ட இனங்களுக்கு காணப்படும் மோகம் காரணமாக இன்று கூத்து கலை வடிவங்கள் அழிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அழிந்து வரும் இனங்களின் அடையாளமான கூத்துக்கலையில் தன் வாழ் நாட்களை கொடுத்த கணேசலிங்கம் போன்ற ஈழக்கலைஞர்கள் போற்றுதற்கு உரியவர்கள். இவர் மூத்த தளபதி மேஜர் பசீலனின் சகோதரர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

About அகமுகிலன்

x

Check Also

போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் ஆளுநர் சுரேன் ராகவன்

யாழ்ப்பாணம், நயினை நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு (புதன்கிழமை) விஜயம் செய்த ஆளுநர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் நாகவிகாரையின் ...

%d bloggers like this: