Home / உலகச் செய்திகள் / ஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு!!

ஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபரால் திடீர் பரபரப்பு!!

உலகப்புகழ் பெற்ற சுற்றுலா மையமான ஈபிள் கோபுரத்தில் ஏறிய நபர் கடும் முயற்சிக்குப் பின் இறக்கப்பட்டதால் 6 மணி நேரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் அனுமதிக்கப்பட்ட தடத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று வரவேண்டும். ஆனால் நேற்று திடீரென மர்ம நபர் ஒருவர் ஆங்காங்கு இருந்த கம்பிகளைப் பிடித்து மேலேறினார்.

இதனால் அச்சமடைந்த அதிகாரிகள் ஈபிள் கோபுரத்தில் இருந்தவர்களை அவசரமாக வெளியேற்றினர். மேலும் புதிய பார்வையாளர்களுக்கும் தடை விதித்தனர். இதையடுத்து குறிப்பிட்ட நபரை 6 மணி நேரம் போராடி போலீசார் கைது செய்தனர். அவர் யார் என்பதை குறிப்பிடாத போலீசார், உயர்ந்த கட்டடங்களின் மீது ஏறும் ஆர்வத்தில் அவர் ஈபிள் கோபுரத்தில் ஏறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

 

About அகமுகிலன்

x

Check Also

கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை

ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிக உயரத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ஃபிரடெரிக் ...

%d bloggers like this: