Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

இலங்கை பொலிஸாருக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி

தொழில் ரீதியாக பொலிஸ் அதிகாரிகள் முகம் கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தங்களுக்கு அறியப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் 0112887238 அல்லது 0112887756 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது ஜனாதிபதிக்கு கூறுங்கள் என்ற தகவல் பிரிவின் 0112887474 என்ற இலக்கத்திற்கு அழைத்து தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும்.

அண்மையில் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஜனாதிபதி செயலணி பிரதானியின் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவொன்றும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாதம் 24 ஆம் திகதி பத்தரமுல்லை – சுஹூருபாயவில் உள்ள சட்டம் ஒழுங்குகள் தொடர்பான துறையின் வளாகத்தில் பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது எனவும்  இதில் ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

About அகமுகிலன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: