Home / உலகச் செய்திகள் / இலங்கை ஏதிலியை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்

இலங்கை ஏதிலியை விடுவிக்குமாறு ஐ.நா வலியுறுத்தல்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 9 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலி ஒருவரை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகள் தொடர்பான செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்ற அவர், இருகண்ணும் தெரியாதவர் என்றும், உளநலன் குன்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் விளாவுட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான விபரங்களை அறிந்துள்ள ஐக்கிய நாடுகளின் ஏதிலிகள் தொடர்பான செயற்குழு, அவரை விடுவித்து, அவருக்கு நட்டயீட்டை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஏதிலி என்று அடையாளம் காணப்பட்ட ஒருவரை 9 வருடங்களாக தடுத்து வைத்துள்ளமை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: