Home / சினிமா செய்திகள் / இலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சி ”பார்த்தீபா” – காணொளி உள்ளே

இலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சி ”பார்த்தீபா” – காணொளி உள்ளே

இலங்கையில் ஒரு டிஜிட்டல் திரைப்புரட்சிக்கு தயார் ஆகின்றார் இயக்குனர் அபர்ணா சுதன்.

இலங்கையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் சக்தி FM இன் முகாமையாளர் அபர்ணா சுதனின் இயக்கத்தில் உருவாகியுள்ள “பார்த்தீபா” திரைப்படத்தின் முன்னோட்டம் 18ஆம் திகதி செப்டம்பர் 2019 அதாவது நேற்று (18) வெளியிடப்பட்டது.

பார்த்தவர்கள் அனைவரையும் பிரம்மிக்க வைத்த அந்த முன்னோட்டக் காட்சியை தற்போது வரைக்கும் 2.1K பார்வையாளர்கள் கடந்த 12 மணித்தியாலங்களில் பார்வையிட்டுள்ளனர்.

ஒரு வானொலிக்கு தொலைப்பேசி அழைப்பொன்று வருகின்றது.

அந்த அழைப்பில் ஒரு பெண் தன்னைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புகின்றாள்.

அவளின் அந்தக் குரலுக்குப் பின்னால் உள்ள கதையைத் தேடிச் செல்லும் வானொலி நாயகனையும் அந்த மர்மக் குரலையும் மையப்படுத்தியதாகவே இந்தக் கதை அமைந்துள்ளது.

முன்னோட்டத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே திரைப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துவது தான் இயக்குனரொருவரின் வெற்றி.

அந்த இலக்கை தனது முன்னோட்டத்தில் இயக்குனர் அபர்ணா சுதன் அடைந்திருப்பது என்பது வியப்புக்குரிய விடயமல்ல.

இலங்கையின் வானொலித்துறையில் புதிய பாதைக்கு சொந்தக்காரன் அபர்ணாவின் இந்த முயற்சியும் இலங்கையின் திரைத்துறையில் புதிய ஒரு பரிணாமத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கலாம்.

அத்துடன் திரைப்படத்தில் வருகின்ற பாடல்வரிகளும் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றது எனக்கூறினால் அது மிகையாகாது.

“பார்த்திபா”வின் இசையமைப்பாளர் பிரஜீவின் இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் மூன்றும் படத்தின் பெரும் பலமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.

பாடலுக்கும் படத்திற்கும் பலம் சேர்ப்பதில் வருண் துஷியந்தனின் வரிகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை, இலங்கையின் பல திரைப்படைப்புகளுக்கு பாடல் எழுதிவரும் பாடலாசிரியர் வருண் துஷி பார்த்தீபாவையும் தனது வரிகளால் அழகுபடுத்தியுள்ளார்.

“ஒருமுறை ஒருமுறை உறைகிறேன் ஒருமுறை இருமுறை பலமுறை தொடராதோ வாதை” என ஆரம்பிக்கும் பாடல் இசை ரசிகர்களைக் கட்டிப்போடும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் ‘அதிகம் பேசினால் மதிப்பிருக்காது அளந்து பேசடா அலுப்பிருக்காது” என்று ஆரம்பிக்கும் பாடலும் ‘மாயமோ? காயமோ? ஞாயமோ? இல்லை துரோகமோ? என்ற பாடலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

கதையின் நாயகன் கஜன் கணேசன் கோமாளி கிங்ஸ் மற்றும் பல சிங்களத் திரைப்படங்களில் நடித்த அனுபவனும் திறமையும் தனித்துவமும் மிக்க ஒர் நடிகர்.
அத்துடன் இலங்கையின் கலைத்துறையில் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் தமிழ் சிங்களத் திரைப்படங்கள் என சகல துறையிலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டுள்ள மூத்த கலைஞன் சந்திரசேகரன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அத்துடன் இத்திரைப்படத்தில் பல புதிய மற்றும் முன்னணி கலைஞர்கள் பங்கேற்று இப்படைப்புக்கு வலுச் சேர்த்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படைப்பின் வெற்றி என்பது இலங்கை சினிமாவின் இன்னுமொரு புதிய பரிமாணமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் தடை..!!

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல அப்பிளிக்கேஷன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இவ்வாறான அப்பிளிக்கேஷன்களில் சில பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துகின்றன. ...

%d bloggers like this: