Home / உள்நாட்டு செய்திகள் / இலங்கையில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது, ஜனாதிபதி

இலங்கையில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது, ஜனாதிபதி

நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த அசாதாரண நிலமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி வெளிநாட்டுத் தூதுவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் நேற்றைய தினம் நடத்திய அவசர சந்திப்பின் போது அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகள் அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்காவின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக கொழும்பிலுள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

நாட்டின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் பதற்றமான நிலமைகளுடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்து உயர்ந்தபட்ச தண்டனை வழங்குமாறு பொலிசார் உட்பட சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரச தலைவர் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நடைபெறும் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் ஸ்ரீலங்காவில் திட்டமிட்டு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன் பின்னணியில் அரசியல் சக்தியொன்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும் தமது அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியதை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நடவடிக்கைகளின் போது எவ்வாறான தடைகள் எழுந்தாலும் அவற்றை கைவிடாது முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

இலங்கையில் இன்று பாராளுமன்றத்தில் நடந்தது என்ன..?

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் ...

%d bloggers like this: